சுமை

சுமையானது
கல்வி இப்போது..

வசதியுள்ள பிள்ளைகளுக்கு,
புத்தகச் சுமை-
முதுகில்..

வசதி குறைந்த இடத்தில்_
புத்தகச் சுமை பிள்ளைகளுக்கு,
கடன் சுமை-
பெற்றோருக்கு..

வறுமையான பிள்ளைகளுக்கு,
'இளமையில் கல்' சுமை-
தலையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jun-16, 6:40 am)
பார்வை : 132

மேலே