யானை பாகா நான் உனை நேசிக்கிறேன்
ஒன்றும் ஒன்றும் ஒன்றுமோ
எழிலா எழிலா
ரெண்டும் ரெண்டும்
கூடுமோ
முகிலா முகிலா
மூன்றாகி நான்காகி
நாமாவோமோ
மருதா மருதா
ஊனாகி உயிராகி
உனக்குள்ளே
எனக்குள்ளே
நமக்குள்ளே
நமை தேடுவோமோ
அன்பா அன்பா
உன் வியர்வையில்
நான் குளிக்கிறேன்
குளிக்கிறேன்
(கரைகிறேன்)
என் சேலையில்
நீ துவட்டினாய்
துவட்டினாய்
காற்றில் காற்றில்
கரையுமோ காதல் காதல்
நெஞ்சில் நெஞ்சில்(அன்பும்)
கூடுமே(கூடுவோம்) உயிரே உயிரே
அர்த்தமாகி
அர்த்தநாரீஷ்வரர்
நாமாகிறோமடா
அடடா
யானை பாகா
உனை அரசன்
என்று சொல்லாமல்
என் புருஷன்
என்றே சொல்வேனடா
அரியணை ஏற நான்
உன் கையை பிடிக்கவில்லை
உன்னை பிடித்ததால் மட்டும் தான்
உயிரையும் உன்பெயரில் மாற்றிவிட்டேன்
என் மார்பே உனது படுக்கையடா
உன் மடியே எனது
வீடடா
எனை விடாதேடா
கட்டிப்போடடா உயிரில்
வெட்டிப்போடடா பாதத்தில்
~ பிரபாவதி வீரமுத்து