வழிமாறிய பறவை

உடை விலக்கி
உதடு குவித்து
மேனி எங்கும் பிசைந்துவிட்டு
மாரளவை அளவெடுத்த
ஜமினே
எழுதிகொடு
எந்தன் பேரில்
உந்தன் ஆஸ்தியை

ஆடவன்
ஆட்டிவைக்கும் பொம்மை நாங்கள்

தீபம் எரிய எண்ணெய் ஊற்று
காமத் தீப்பிடிக்க பணத்தை கொட்டு

இராமனா இருந்தாலும்
இராவணனா இருந்தாலும்
எங்களுக்கு எல்லாமே
வியாபாரம்


உடம்பை விற்றாலும்
மனசாட்சியை விற்றதில்லை
மண்ணை பொன்னாக்கி
பொன்னை என்னிடம் தருவார்


ஏதோ ஓர் மூலையில்
என் கொடி பறக்கும்
கோடிகள் கேடிகளிடம்
கேட்பாரற்றுக் கிடக்கும்

மகள் தங்கை என்று பாரா உலகம்
கேடிகளின் கொடூரம்
இங்கு யாருக்குத் தெரியும்

நாங்கள் மட்டும் இல்லை எனில்
இன்னும் எத்தனை
பெண்களின் நிலை அவலம்
(அவலமாகும்)


நான் படித்திருந்தால்
என் நிலை
மாறியிருக்கும்
நான் படிக்காதது யார் பிழை
ஊதாரி அப்பனின் பிழையா
இல்லை ஓடுகாளி அன்னையின் பிழையா
இன்னும் என்னை
வாழ வைக்கும்
அந்த கடவுளின் பிழையா

நானே பிழையாய்
போனபின்
நான் எந்த பிழையை
சொல்லுவேன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Jun-16, 7:54 pm)
Tanglish : valimaariya paravai
பார்வை : 60

மேலே