காதலும் கல்யாணமும்

வாழ்க்கை என்னும்
என் வீட்டில்

கனவுகள் களவாடப்பட்டது
சுதந்திரம் சூறையாடப்பட்டது
ஆசைகள் கற்பழிக்கப்பட்டது
உணர்வுகள் கொலைசெய்யப்பட்டது

உள்ளம் என்னும்
காவல்நிலையத்தில்
விசாரணை நடந்துவருகிறது

காரணம்
காதல் என்னும் கள்ளனா
இல்லை
திருமணம் என்னும் திருடனா
என்று ....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (16-Jun-16, 2:58 pm)
பார்வை : 752

மேலே