வீடு வந்து சேர்வாயோ
மனதிற்கு பிடித்தாற்போல் ஒருவனை காண்கயில்
ஓர் பெண் மனம் பெண்மையை உணர்வது காதல் ...!!
ஆனால் அவனை கண்டபோது என் மனம் தாய்மையை உணர்ந்ததே
இதற்கு என்ன பெயர்....??
விழிகள் பிறரை பார்க்கும் தருணங்களில் மனம் உன்னையே நாடியது ...
உன் கண் பார்த்த கணமே வாழ்வின் அர்த்தம் நீதான் என்று மனம் சொன்னது சரியா ??
இதுதான் வாழ்வின் விதியா ??
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இன்றும் என் காதில் ஒலிக்கின்றது உன் குரலில் ....
உன் குரலுக்கு ஈடாய் மழலை மொழிகளும் இல்லை என்று என் மனம் கொள்வது சரியா??
இதுவும் காதலின் சதியா ...??
கடலும் பாறையும் காதலிக்க தான் அலைகள் தோன்றியது என்றல்
நீயும் நானும் சேரத்தான் காதல் தோன்றியதா..!!
உலகம் இயங்குவது காதலினால் தான் என்றல்
நாம் வாழத்தான் இந்த காதலும் உலகமும் வடிவம் கொண்டதா ..... உன் உருவில் ...!!
என்னை என்ன சைய்தாயடா .... !?
வீடு திரும்பும் மனிதனை தேடும் நாய்குட்டி ஆனேன் ....
வழியில் விழி வைத்து உறக்கமின்றி நான் காத்துகிடக்க ....
வீடு வந்து சேர்வாயோ ....என்னிடத்தில் .....!!!