எதுவும் இல்லையடி
மெத்தையும் உள்ளதடி
கட்டாந்தரையும் உள்ளதடி
அது ஏனோ
இந்த துயில் மட்டும் இல்லையடி
கண்களும் உள்ளதடி
அதில் இமைகளும் உள்ளதடி
அது ஏனோ
உந்தன் பிம்பம் மட்டும் இல்லையடி
குரலும் உள்ளதடி
மொழியும் உள்ளதடி
அது ஏனோ
வார்த்தைகள் மட்டும் இல்லையடி
அரசும் உள்ளதடி
செங்கோலும் உள்ளதடி
அது ஏனோ
ஆள நிலம் மட்டும் இல்லையடி
வெற்றியும் உள்ளதடி
தோல்வியும் உள்ளதடி
அது ஏனோ
போட்டி மட்டும் இல்லையடி
சொர்க்கமும் உள்ளதடி
நரகமும் உள்ளதடி
அது ஏனோ
உடலில் உயிர் மட்டும் இல்லையடி
பகலும் உள்ளதடி
இரவும் உள்ளதடி
அது ஏனோ
எந்தன் உலகம் மட்டும் சுழலவில்லையடி