வார்த்தைகள் என்னிடம் இல்லை
![](https://eluthu.com/images/loading.gif)
வார்த்தைகள் என்னிடம்
இல்லை.....என்
வாழ்க்கை உன்னிடமே
என்று
தஞ்சமான
நாள்தொட்டு......!!
அன்பே அன்பே
என்று
அனுதினமும்
ஆசையாய்
அழைக்கிறேன்.....பதில்
இல்லை.....ஆனாலும்
என் குரல்
ஓயாது.....!!
பிஞ்சு
மொழி கேட்காமல்
நெஞ்சுக்குழி
எல்லாம்
வலி....தானே
எனக்கு
மிச்சமாச்சு.....!!
கடந்து
சென்ற
தடங்கள்
தான்....காதலின்
அழகு.....எல்லைகள்
கடந்து
இன்னுமின்னும்
நீளும்.....அழகிய
துன்பம்
தான்.....!!
எனக்கென
பிறந்தாய்
என்று சொல்லிச்
சொல்லி.....வாழ்ந்த
நான்
இன்று
என் இறப்பை
நெருங்கி
நிற்கிறேன்.....!!
இப்போதும்
கேட்கிறேன்
சம்மதம்
அல்ல....சிறு
புன்னகையை
மட்டுமே.....காரணம்
கல்லறைக்குத்
தேவை
பூக்கள் தானே.....!?!