ஒரு கவிதைக்குள் தொலைந்தவன்

ஒரு கவிதைக்குள் தொலைந்தவன்
*******************************************

இன்றிலிருந்துதான் யாசிக்கப் போகிறேன்
இடைவிடாமல் பேசுகிற
முத்தங்களைப்போல
இடையிடையே
நின்று பொழியும் மழைப்போல
மரக்கிளைகளில்
நின்று துளிர்க்கும் சாரல் போல
போக்கு அறியாத தூரப்பயணம் போல
அடைப்புகளில்லா
துவாரங்களைப்போல
உன் நினைவுகளை பழகிவிட்டேன்

இனி சுவாசிக்க விடுவதில்லை
என் காலங்களை

அசைவில்லாத
பிரம்மாண்டங்களில்
ராஜதுருவ அனற்கூறுத்துருவி
அகற்றுள் உருவும்
பேரண்ட பைத்தாழியில்
கரைந்திடாத செதில்கள் வருடுமாம்
அதற்குக்கூட்டாய்
அந்தநேர அனிச்சைகளில்
ஒருதலை கிரீச்சிடும்
மிடற்பக்ஷி சாக்குரல் இருத்தி
நிச்சலனம் பிறத்தினேன்

முகமொட்டும் காற்றாடைத் தரிப்பின்
பிரியமானச புத்ரிகாவே

நீரோடை விளிம்பினாள்
மேலாடை விளம்பினேன்

அச்சமில்லாதே இருந்துவிடு
மேற்றட்டு நல்குமாய்
ரேகைகளின்
நூலிழை திஷுக்கள் உருவி
நூகி நூகியாய்
உன் கருபரணம் நெய்கிறேன்

வானஸ்தூபிகளில்
மஷிப் படரும் சூரிய அழுக்குபோல
உன் மேடுபறிந்த
என் நாணவங்களை
சுடச்சுடற் றாக்குகின்றதே
நின் கொள்ளிமான் விழி


உடுத்திலேனும் போகிறேன்
இதுநின்றும் பாரித்த
ஊர்க்கள்வன் மெய் உரையால்
இருள்போல கருக்காதே
திகழ்வாராய் கண் அணங்கே,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (17-Jun-16, 12:31 am)
பார்வை : 136

மேலே