அவள்

காட்டு மூங்கிலின்
துளைகள் கடந்து
கவிதை எழுதுவேன்
உன் கற்பனை
எரியும் கனவுகளுக்கு...

செந்தாமரைக் கரம்கொண்டு
யாழ் வாசிக்கும்
தேவதையே...
உன்னைச் சுமந்து செல்லும்
பாக்கியம் உண்டா எனக்கு ?

புறாக்களின் சிறகுகளை
வெட்டுகிற தேசத்தில்
நாம் இருவரும் காதலிப்பது
காதலுக்கு நாம் வகுக்கிற
தர்மம் பெண்ணே !

அன்று
உன் வருகைக்காக
நான் பிள்ளையார் கோவில்
மரத்தடி நிழழாகக் காத்திருந்தேன்...

அந்த
ஒற்றையடிப் பாதையில்
மெல்ல நடந்துவரும்
மேகமாய்
நீ
வருவாய் !

காற்றில் பறக்கும்
உன்
துப்பட்டாவில்
ஒளிந்திருந்தது
நானல்லவா !

நீ
என்னைக் கடக்கிற
கண நிமிடங்களில்
கோடிப்பூக்கள் மலர்ந்தது...
லட்சம்முறை புயல் அடித்தது...
ஆயிரம் கைகள்
தட்டும் சப்தம் கேட்டது...
நூறு செடிகள் மூளைத்தது...

எல்லாவற்றயும் விட-உன்
ஒற்றை புன்னகை மட்டும்
ஓரே நிமிடத்தில்
உலுக்கி விட்டது
பெண்ணே !
-----------------__________________----------------
-திரு

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 12:46 am)
Tanglish : aval
பார்வை : 125

மேலே