என் அகக்கவி

நான் எழுதும் அகக்கவி!!!

என்னை நான்
எங்கோ
எங்கெங்கோ தேடியிருக்கிறேன்...

நான் ஆண் என்றும்
நீ பெண்ணென்றும்
எனக்கு சொன்னார்கள்!!

நாம் மனிதர்களென்றும்
சொன்னார்கள்!!!

இது, இந்த வேஷம் யாரோ கொடுத்தது..
உன்னில்
உன்னால்
ஊண் கடந்து,
உணர்வாய் நான்
ஊடுருவி நின்ற க்ஷணம்,

வேஷம் கலைந்தது,
ஆணெனும் அகம்பாவம் கலைந்தது
அமைதி கலந்தது!!!

இசையாய், பேரொளியாய்
என்னுள்
எங்கும் அது!!!

நானும்
ஒரு நாய் போல்,
நரி போல்..
ஊண் உண்ணப்பிறந்த
ஒரு உயிரோ என நினைத்திருந்தேன்...

இந்தப் பிறவி
இந்த உயிர்,
இந்த வாழ்வும்,
இதற்காகவோ???
பசிக்கவும் பின் அதற்காய்
புசிக்கவும் - மீண்டும் சுவை புரியாது,
ருசிக்கவும் என
என்னுள் ஏக்கங்கள் தாக்கின...

உன்னோடு கலந்தது
என் உணர்வோடு கரைத்துவிட்டது!!!
என்
மெய் மறந்து,
பொய் துறந்து இன்று
வெறும் உணர்வாய்...
உன்னைச் சேர
ஓர் உணர்வாய் இங்கு இருக்கிறேன் ... - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (18-Jun-16, 12:44 am)
பார்வை : 64

மேலே