அவன் குரல்

மெல்லிய தென்றல் மிதமாக வீச
ஆகாய சிறுதளி விழ
மண்மனம் வீதி எங்கும் கமழ
ஆழிமுத்தாய் தேகம் சிலிர்த்ததே !
மனம் மயங்கும் மெல்லிய குயிலோசை
அமைதியாய் செவியை ஈர்க்க
மழைச் சாரல் வீசும் ஊதக்காற்றில்
ஆர்ப்பரிக்கும் அவன்குரல் செவிமடுத்தாளே !
மதனன் குரல் கேட்ட கனம்
அன்னக்கொடியவள் தன்னை மறந்தாளே !
மன்னவன் குரலை இந்த கனம்போல்
அனுதினமும் கேட்க ஏங்கினாளே !