அழகி
கருமேகம் புடைசூழ
கந்தக அலைகள்
தணியுமே
உன்
மன்மத மழையில்...
🌧
உன்
நெற்றியில் எரியும்
பொட்டு
பால்வீதியின் மேலே
வெளிர்பூக்களை சிதறடிக்கும்
வெண்ணிலவல்லவா..!
🌝
அடியே..!
அடியாழத்தில்
குடிகொண்ட வைரச்செடியே..!
நாவற்பழ விழியே..!
பட்டுவிரல் பூவே..!
சிறுசுகளின் சிணுங்கலில்
பற்றிக் கொள்ளுதடி
உன் சிற்றிடை அனல்..!
🔥
நீ
கன்னி தேவதையில்
கனல்..!
அழகிய
அசுரன்களைப் பொசுக்கிவிடும்
தணல்..!
☔- திரு