எந்தைக்கு
" தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் "
" எந்தைக்கு "
எந்தையே....! எந்தையே....! : எல்லாமெனக்கு தந்தீயே....!
எந்தையே.....! எந்தையே.....! ;
எல்லாமெனக்கு
தந்தீயே...!
கைகள் வணங்குது ; கண்களில் நீர் கோர்க்குது
கலங்கரைவிளக்கை நினைக்கையிலே....!
தாலாட்டு தெரியாது ; ஓராட்டுத் தெரியாது
குளிப்பாட்டத் தெரியாது ; கொஞ்சிப் பேசிட தெரியாது...!
எங்கம்மாவின் தாலாட்டு மடிக்கு சற்றும் குறைந்ததேயில்லை............!
எந்தையே நுந்தம் பாசமிகு தோள்கள்....!
தாயின் மடிக்கு தூங்க வைக்கத் தெரியும் ;
எந்தையே நுந்தம் தோள்களுக்கே
தன்னம்பிக்கையூட்டத் தெரியும்...!
" பொட்டப்புள்ள புறந்திருக்குன்னு " ஊரே பேசயில
" மகாலெட்சுமி பிறந்திருக்கான்னு " அள்ளி என்னை அணைச்சீங்களேப்பா ...!
ஊருவாயை அடைச்சீங்களேப்பா...!
கம்பீரமாய் சிங்கமாயிருந்தாலும்
குலசாமி கோயிலில காதெனக்கு குத்தயிலே கலங்கித்தான் போயிட்டீங்களே...!
காய்ச்சலெனக்குன்னா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுவீங்க....!
ஊசிபோட்டு நானழுதா மருத்துவரை திட்டுவீங்க..!
கேட்காமல் வரங்கள் தரும் "சாமிப்பா" நீங்கள்....!
ஏ கழுதை...., ஏ எருமை....., ஏ லூசேன்னு குரல் கேட்டா கூப்டறது எங்கம்மாதான்....!
என்தங்கம்...! எங்கம்மா....!
என் செல்லம்...!
எந்தாய்ன்னு குரல் கேட்டா
கூப்பிடறது எங்கப்பா நீங்க மட்டுந்தானுங்க...!
எங்கம்மாகிட்ட எப்போதும் தலைதூக்கும் உங்க ஆணாதிக்கம் எங்கிட்ட மட்டும் " அமாவாசை நிலவாய் போவதென்ன அதிசயமே...! "
" பொட்டப்புள்ளைக்கு இம்புட்டு செலவு
ஏன்டா பண்ற ..?
உன்னோட எதிர்காலத்துக்கும் கொஞ்சோண்டு வச்சிக்கப்பான்னு யாராச்சும் சொல்லிப்புடடா ...! " என்னோட எதிர்காலமே எம்மகதான்னு வாய்நிறைய சொல்லுவீங்களே.....!
தீபாவளிப் பொஙகல்னா புத்தாடை கொடுப்பீங்க...!
புறந்தநாளு
எனக்குன்னா தடபுடலா செய்வீங்க...!
உங்களோட புறந்த நாளை சாதரணமாய் கழிப்பீங்க...!
பொட்டைப்புள்ளைக்கு இம்புட்டு செல்லம் கொடுக்காதீங்கன்னு அப்பத்தா சொல்லறதெல்லாம் செவிடன் காதில் ஊதின சங்காக்கீவிங்க...!
உப்பில்லா குழம்பை நான் செஞ்சு வச்சாலும்
ஆஹா....! ஓஹோன்னு பாராட்டுவீங்க...!
ஊருக்கென்னவோ நீங்க ரோஜாச்செடி முட்கள்தான்...!
எனக்கெப்போதுமோ ரோஜாப்பூதா
ன்...!
பெரிய மனிஷியானப்ப
நல்லன கெட்டன
சொன்னிங்க தோழியாய்....!
என் தேவைக்காக தன் சுகம் துறக்கும் துறவியப்பா நீங்கள்...!
மணக்கோலம் பூண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு போகயில இமைஅனண உடைச்சு கண்ணில் பெருக்கிய வழிந்தோடும் காவிரியில்
கல்மேல் எழுத்தாய் நிற்குதன்ன நுந்தம் பாசம்....!
பேரன் பேத்தி எனக்கேயிருக்கும் பருவத்திலும்
எந்தையே நுந்தம் தோளில் சாய்ந்திருக்கும் போது உச்சிமோந்து முத்தமிட்ட நாட்களெல்லாம்
காலம் தின்று செரிக்க முடியாத நினைவுகள்.....!
" தம்பாஜி..! "
" தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...! "