முள்வேலி

முள்வேலி
=================================ருத்ரா

இதயத்துக்கு
முள்ளை வேலியிட்டான் இறைவன்.
த‌ன்
ரத்தத்தில் நாளம் இட்டான் மனிதன்.
மதச்சுவர்கள் நொறுங்கிப்போயின.
கோவில்களில்
இதயங்கள்
ஆயிரம் வேண்டுதல்களால்
கூளங்கள் ஆயின.
சிலைகள் முன்னே
கண்மூடி நின்றாலும்
வாசலில் விட்டு விட்டு வந்த‌
செருப்புகளும்
கார்களுமே
கண்களுக்குள் நின்றன.
அவதாரங்களை அர்ச்சித்தாலும்
அந்த "டோக்கன்"களே
சமஸ்கிருதத்துள் நுழைந்து கொண்டன.
பக்தர்கள் பிதுங்கலில்
விட்டு விடுதலையாகி
வெளியே வந்ததும்
இனம் தெரியாத குழந்தை ஒன்று
முகம் தெரியாமல்
புன்னகை பூக்கிறது.
இதயத்தின் இரும்புவேலிகள்
இற்று விழுகின்றன.

=============================================

எழுதியவர் : ருத்ரா (19-Jun-16, 5:26 am)
Tanglish : mulveli
பார்வை : 109

மேலே