உன் மார்பிலே

இரவு 10 மணி
நானும் கணவரும் பேசிக்கொண்டிருக்கையில்
ஒளிந்து விளையாடலாமா
என்று கேட்டேன்.
அவரும் சரி என்றார்
விதிமுறை
வீட்டிலேயே ஒளிய வேண்டும்.
விளக்கு எதையும் போடக்கூடாது. வீட்டின் வெளிப்புற
கதவு ஜன்னல் எல்லாம் சாத்தி இருக்க வேண்டும்.
வீட்டிற்குள் எங்கே வேண்டுமானாலும் ஒளியலாம்.
ஆட்டம் ஆரம்பமானது
ஒருவரை ஒருவர் ஒளித்து கொண்டே மற்றொருவரை தேடினோம்.
ஏ மாமா
நான் தான் ஜன்னல
திறக்கக்கூடாதுனு
சொன்னன்னே
விதி மீறிங்களா
என்று கூறிக்கொண்டே அருகில் சென்றேன்.
அருகில் சென்றவுடன் தான்
அது என் மாமா இல்லை
திருடன் என்பது புலனானது
திருடன் என்று கத்தவரும் பொழுது
கழுத்தில் கத்தியால் ஓங்கி குத்தினான்.
அப்பொழுது மாமா அறைக்குள் நுழைவதை பார்த்த திருடன்
எனை ஜன்னல் துணிகளுக்கு இடையில் இழுத்துச்சென்றான்.
மாமா என் எதிரில் நின்றும்
என்னால் மாமா
என்று கூறமுடியாமல்
தவித்துக்கொண்டிருந்தேன்
திருடன் என் உடலில் உள்ள எல்லா நகைகளையும் கழட்டினான்.
தடுக்க முயன்றும் என்னில் திராணி அற்றே சோர்ந்தேன்
தாலியை தொட வந்தான் தாலியை இருக்கமாக பிடித்துக்கொண்டேன்.
மாமாவை எப்படியாவது
தீண்டிவிட வேண்டுமென்று
காலை நீட்டினேன்
திருடன் அவன் காலால் என் காலை மடக்கினான்.
மாமா அறையை விட்டு வெளியேறுகிறார்.
என்ன செய்வது என்றே யோசித்து
கழுத்திலிருந்து கத்தியை உருவி குத்த முயன்றேன்.
அதை பார்த்த அவன் கத்தியை பிடுங்கி
என் பக்கம் திருப்பி நெஞ்சில் குத்தினான்.
நான் அவன் கையை கடித்துவிட்டு
சடாரென்று கீழே விழுந்தேன்.
திருடனின் காலை பிடித்துக்கொண்டேன்.
மாமா சத்தம் கேட்டு உள்ளே ஓடி வருகிறார்.
திருடன் அவன் காலால் எனை எட்டி மிதிக்கிறான்
கத்தி இன்னும் ஆழமாக இறங்கி இதயத்தில் சொருகியது .
வலியில் கை தளர்ந்தது.
திருடன் ஜன்னல் வழியாக வெளியேறுவதை பார்த்த மாமா ஓடிவருகிறார்.
வழியில் நான் இருப்பதை அறியாத மாமா என் மீது கால் வைத்து தடுக்கி என் நெஞ்சில் விழுந்தார்
விழுந்து எனை தொட்டதும்
நான் தான் என்பதை உணர்ந்தார்.
எனை தூக்கிக்கொண்டு விளக்கை போட்டுவிட்டு
ஓடினார்
என்னால் பேச முடியாமல்
மாமா என்று மெதுவாக முணகினேன்.
என்னடி என்றார் மாமா.
மாமா கழுத்தில் உள்ள தாலியை பிடித்துக்கொண்டே கூறினேன் .தாலி கழுத்தில் சரியாக உள்ளதா மாமா.
தாலியை என் நெஞ்சில் பதியும்படி
ஜாக்கெட்டிற்கு உள்ளே விட்டு
நெஞ்சில் ஒட்டி வையுங்கள் மாமா என்று கூறியபடியே
அவர் மார்பில் மரித்து போனேன்
~ பிரபாவதி வீரமுத்து