இது காதலா
பெண்ணே
நீ
நடந்திடும் நேரங்களில்
என் தேகத்தை
பாதையாய் விரிக்கத் துணிகிறேன்......
கொட்டிக்
கிடக்கும் கற்களையும்
சிற்பங்களாய்
இரசிக்க துவங்குகிறேன்......
நகவெட்டி
கைகளில் வைத்துக் கொண்டு
பற்களால் கடித்தே
துப்புகின்றேன்......
நடுச்சாமம்
பொழுதிலும்
உன் பெயர்ச் சொல்லியே
புலம்புகிறேன்......
பூக்களை
பார்க்கும் நொடிகளில்
புதுக் கவிதைகள்
மொழிகிறேன்......
பூமியைக் குடைந்து
வண்ணம் சிந்தும்
மலர்ச்செடிகள்
நட்டும் வைக்கிறேன்......
தார்ச்சாலை வெயிலில்
காலணியின்றி
நடந்துச் செல்கிறேன்...
எந்த ஒரு உணர்வுமில்லை...
நினைவுமில்லை...
கண்ணே உன்னைத்தவிர......
இது காதலா?...
ஆவலாய் காத்திருக்கிறேன்......
இருமனமும் இணைந்தால்
கால் முளைத்த அருவிகள்
என் நெஞ்சுக்குள்ளே ஓடும்......
இணையாதென்றால்
என் கண்ணுக்குள்ளே ஓடும்...
உடலைக் கரைத்து
என் உயிரையும் மூடும்......