யார் இந்த தேவதை

கரிசல் காட்டுத் தேவதை
கண்ணெதிரே வந்தாளே...
இமை மூடும் நொடிகளில்
இதயம் கொய்துப் போனாளே......


கோதை விழிப் பார்வைகள்
மோகத்தை என்னில் விதைக்க
கள்ளூறும் பூக்கள் உள்ளாடுதே...
கடல் அலைகளாய் நெஞ்சை மோதுதே......

கரிசல் காட்டுத் தேவதை......

காற்று வீசும் திசையெங்கும்
கானல் மகளாய் வந்து செல்கிறாள்...
நெஞ்சுக்குள்ளே தீயை மூட்டி
பனித்துளியை மேலேத் தூவுகிறாள்......


வானில் நீந்தும் பறவைகளாய்
உள் மனதில் சிறகு விரித்து
மௌனம் பேசும் மொழிகளில்
புது மலர்ச்சியைத் தூண்டுகிறாள்......


அவள் இல்லாத நேரங்களில்
கண் இமைகளும் பாரமாகுமே...
பாவை முகம் பார்த்தப் பின்னால்
பார்த்த விழிகளும் பாரம் தாங்குமே......

கரிசல் காட்டுத் தேவதை ......

சாரல் மழையாய் ஜன்னல் வந்து
தேகம் நனைத்துப் போகிறாள்...
சாலையின் மீது நிழலாய் விரிந்து
கதிரின் வெப்பம் தணியச் செய்கிறாள்......


அவள் வாய்மொழி கேட்காது
என் தூக்கம் போனது...
அவள் வாசல் தேடியே
என் இரு கால்கள் ஓடுது......


நிலவே நீ இவள் நகலா?...
வானவில் கை வளையல் மகளா?...
விடைகள் தெரியாத வினாக்கள் தினம்
என் மனதை இன்னும் கசக்குதே......

கரிசல் காட்டுத் தேவதை......

எழுதியவர் : இதயம் விஜய் (19-Jun-16, 9:05 am)
பார்வை : 463

மேலே