விட்டில் பூச்சியாய்

வரிகள் .....இல்லாத
வெற்று காகிதமாய்
ஏனடி ? உன் முகம்
வெறிச்சோடி கிடக்கிறது
உன் அகத்தில் .......
அலைபாயும் ஆசைகளை
உன் முகத்தில் ...
தெரிந்து கொண்டேன் .
முழுமதியை மூடிமறைக்கும்
முகில்போல .......உன்
முகத்தை மூடிமறைக்கும்
முடிகூட அழகுதான் பெண்ணே !
உமிழ்நீரை மையாக்கி
உன் உதடுகள் எழுதும் வரிகள்
கன்னத்தில் தானடி முத்தமானது ?
உன் இடை நெளிப்பை .....
பார்க்கும்போது !
நடை பயின்ற நட்டியககர்யியாய்
நடந்து போகிறாய்
முக பூச்சியில்லாத ...
முகத்தை பார்க்க
விளக்கு வெளிச்சத்தில் விழுந்த
விட்டில் பூசியானேன் ...........

எழுதியவர் : இரா .மாயா (19-Jun-16, 11:30 am)
Tanglish : vittil poochiyaai
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே