நாய்

நக்கி
பிணைந்து
வால் குழைத்து
நழுவாத
தூய்மை
சங்கிலி இறுக்கம்
குலைகையில்
சனியன்!
இந்தப் பாடு படுத்துகு!

இழந்ததால்
அடிமைப்படும்
குழந்தைமை!

அனிச்சையாய்
வெளித்தள்ளும்
உயிர்த்துடிப்பு
அகம் நிறைக்க
எனக்கே எனக்கானதாய்!

ஈறு விறைத்து
மூர்க்குகையில்
நாக்கு சொட்ட
குண்டியிடித்து திணறுகையில்
நிலா முற்ற ஊளையில்
நாய்!

அடித்து
வெறும் பிண்டமாய்
காலிடுக்கில்
வால் சுருக்கி
சவம் விஷக்கடில்லா!

எழுதியவர் : நந்தகுமார் (19-Jun-16, 11:33 am)
Tanglish : nay
பார்வை : 78

மேலே