தந்தையர் தினம்

அப்பா
 
இந்த மந்திரச் சொல்லை
நாம் புரிந்து கொள்ள
சில காலம் பிடிக்கும்
 
நம் சிறு வயது முதலே
நம் எதிர்காலம்
நல்லதாக அமைய
அக்கறை காட்ட ஆரம்பிப்பார்
 
பாசத்தோடு கண்டிப்பையும்
கலந்து நம்மை அணுகுவார்
 
பாசத்தை புறந்தள்ளி
கண்டிப்பை மட்டும்
நம் அடி மனதில்
பதிய வைப்போம்
 
அவருக்குள்ளும் தாய்ப் பாசம்
இருப்பதை
அறியாத பருவம் நம் பருவம்
 
நம் வளர்ச்சியைக் கண்டு
தன் மனதிற்குள் சந்தோஷப்பட்டுக்
கொள்ளும், உறவு அது
 
எந்தவித கஷ்டம் வந்தாலும்
தம் தோள்மீது  அதை தாங்கிக்
கொண்டு
 
நமக்கு நல் வழியைக் காட்டும்
உறவு அது
 
அப்பா,
 
உங்களை முழதாக
புரிந்து கொள்ள
எங்களுக்கு பல காலம் ஆகும்
 
அதுவரை பொறுமையாய்
இருப்பது உங்கள் குணம்
 
உங்கள்,
 
தியாகங்களையும்,
உழைப்பையும்,
மன வலிமையையும்,
மென்மையான இதயத்தையும்,
அர்த்தமுள்ள சொற்களையும்,
 
சற்றே தாமதமாக நாங்கள்
உணர்வோம்.
 
அப்படி உணரும் பொழுது
இறைவனை விட ,
 
பன்மடங்கு விஸ்வரூபம்
எடுப்பீர்கள் என்பது
யதார்த்தமான உண்மை.
 

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (19-Jun-16, 10:40 am)
Tanglish : thantaiyar thinam
பார்வை : 592

மேலே