கனவுகள் - முக நூல் கவிதைகள் தொகுப்பு 2

என் முக நூல் கவிதைகளின் தொகுப்பு
-------------------------------------------------------------------

என்னை நான் தேடிக்
கொண்டிருக்கும் போதே
நிறைய தெரிந்து விடுகிறேன்
......... பிறர்க்கு!
***

முடியில்லாத முடிவிலும்
முடியைத் தேடும்
சிலர் மனம்!!
***

நாட்களின் நீட்டங்கள்
கூடியிருக்கும் நம்
ஆட்களின் கூட்டங்கள்
குறைக்கும்....
***
கூவும் குயில்களும்
கொஞ்சும் மைனாக்களும்
என் ஜன்னல் வழிச் சோலையில்
மேவும் வேம்பும் கறிவேப்பிலையும்
விரிக்கும் பூவும் காய்க்கும்
கூடுதலாய் இன்று ஒரு சோடி
கருப்பு வெள்ளைப் பறவை
தேடி இணைந்தது....
***

கனவுகளுடன் உறங்கும் நான்
கலைந்ததும் விழிக்கிறேன்!!
***

என் பிடிமானமில்லாப் பின்னிரவின்
பிடித்தமில்லாக் கனவுகள்!!
***

சத்தமில்லாக் கனவுகளின்
இரைச்சலில் விழிக்கின்றேன்...!


---- முரளி

எழுதியவர் : முரளி (19-Jun-16, 9:47 am)
பார்வை : 85

மேலே