வசந்த காலம்
அந்தி மகள் தங்க நகையிட்டு
அந்தரத்தில் நகைக்கிறாள் !
கார் மேகமே உன்னை பாடத்தான்
கம்பன் பிறந்தானோ !
மார்கழியை ஈன்றவளே
மாய பனியை விளக்கி இதத்ததை தர
உன்னால் மட்டும் முடியும்
உன்னால் மட்டுமே முடியும் !
நீ நீயாக இருந்து எங்களை
நிதானம் இல்லாமல் செய்கிறாய் !
முரட்டு கணவனையும்
முந்தானைக்குள் நுழையவைக்கிறாய் !
பொறுமையை பூமாதேவிக்கு
பெருமையாக சொன்னவள் நீ தானோ !
உன்னால் பிறந்த கவிதையை
உனக்கே நான் காணிக்கையாக்குகிறேன் !
தென்றலுக்கு இடம் கொடுத்து
தென்னங்கீற்றை தெம்மாங்கு பாடவைத்தாய் !