வேரறுக்க வேண்டும்
உலக நாடுகளை அச்சுறுத்தும்- இவன்
என் தமிழ் தேசத்திலும் குடிபுகுந்து
அறுவகை நீரும் உயர்வழி ஒன்றும்
உறிஞ்சி உயிர் வாழ்கிறான்...
வெறிகொண்டு என் தமிழன்
வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்
வேர் இருபதினாலே
விவசாயிவிட இருமடங்கு உயர்ந்து நிற்கிறான் ..
வீழ்த்தினால் மட்டும் போதாது- இவனை
வேரறுக்க வேண்டும்.
மண்ணில் துளிகள் தீர்ந்து போகுமுன் -இவனை
வேரறுக்க வேண்டும்.
.
என் மருத்துவ தாவரம் மாய்ந்து போகுமுன் -இவனை
வேரறுக்க வேண்டும் .
தாய் மண்ணை காத்திடவே தரனியிலிருந்து
வேரறுக்க வேண்டும் .
இவன் கடசி கரு -இம்
மணிலிருந்து மாயும் வரை
வேரறுக்க வேண்டும் .
வெறியோடு எழுந்திருங்கள்.....
வேறு பெயர் சொல்கிறேன்
வேரறுத்து சொல்லுங்கள்
விழா எடுப்போம்
வீழ்தான் மண்ணுலக எதிரி என ......
"வேலி காத்தான், Juliflora ,கருவேல மரம், "angaraji babul,kabuli kikar, vilayati babul, vilayati khejra, gando baval, trupillo, mimosa juliflora,prosopic.........