பெண்ணுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன
#அச்சம் என்பது தன் கற்பு நெறியை அறிந்து எப்போதும் அடிமை பயத்தை பயபக்தியுடன் காட்ட வேண்டும் என்பதின் பொருளாகும். எப்போதும் கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டும், அவன் சொல்லை வேத வாக்காக நினைத்து பின்பற்ற வேண்டும், மொத்ததில் ஆணுக்கு பெண் கீழ் தான் என்று அச்சத்துடன் நடக்க வேண்டும் என்பதே இதற்கு பொருள். அதாவது பயம் இல்லையென்றாலும் பயம் இருப்பதுபோல் நடிக்க வேண்டுமாம்.
#மடம் என்றால் மனைவி கணவனை விட அறிவாளியாக இருந்தாலும் கணவனிடத்தில் புத்திசாலியாக காமிக்க கூடாது. அதாவது அவன் மனைவியை முட்டாள், கூமுட்டை என்று கூறினாள் கூட சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் கணவன் கடவுளுக்கு சமமாயிற்றே, அதனால் கீழ்படிந்து தான் இருக்க வேண்டும்.
#நாணம் என்றால் வெட்கம் என்று பொருள். பெண்ணாவளுக்கு தைரியம், தன்மானம், அறிவு ஆகியவற்றை குப்பையில் போட்டுவிட்டு எப்போதும் தன் கணவனின் காம பசியை தீர்க்க மட்டுமே இருக்க வேண்டும். வெட்கத்தை தவிர வேற எந்த வெறுப்பு விருப்புகளை காமிக்க பெண்ணிற்கு அனுமதி இல்லை.
#பயிர்ப்பு என்றால் தன் கணவனை தவிர வேறு ஒருவன் தொடும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சியை பயிர்ப்பு என்று கூறுவர். அதாவது பெண் என்பவள் கணவனுக்காக படைக்கப்பட்ட பிண்டம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டும். ஆனால் ஆண்கள் வெட்கமில்லாமல் பல திருமணம் செய்வார்கள், வேறு பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பார்கள். ஆனால் அது ஆணுக்கு கற்பு நெறியாகும். ஆனால் பெண்கள் காமப் பசிக்காக வளர்க்கப்படும் கோழிகள் ஆவார்கள்.