சமத்துவம் மலரட்டும் சமுதாயம் வாழட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
சாரல்மழை பொழிந்தது
சலசலவென ஒலித்தது
சாளரம்வழிக் கண்டேன்
சஞ்சலங்கள் கரைந்தது
சாந்தமானது மனதும் !
சரிகமபதநி ஒலித்தது
சஞ்சய்யின் சாரீரமது
சரீரத்தை குளிர்வித்தது
சலனங்கள் கரைந்தது
சர்வமும் மகிழ்ந்தது !
சத்தமிகு சந்தையதில்
சகலவித ஒலிக்கலப்பு
சமூகநீதியை காத்திடும்
சமன்பட்ட சமுதாயமாக
சமநிலையில் நுகர்வோர் !
சாதிசமயம் துறந்திட்ட
சச்சரவுகளை மறந்திட்ட
சந்தர்ப்பவாதம் மரணித்த
சமத்துவம் மலரட்டும்
சமுதாயம் வாழட்டும் !
பழனி குமார்