மனதோடுப் பேசுகிறாய்

மனதோடு பேசுகிறாய்
மந்திரப் புன்னகையாய்.....
பொன்னகைக்கும் வெண்ணிலவாய்
மௌனத்தை மட்டுமே வீசுகிறாய்....
இதயங்கள் இடம் மாறியப் பின்
இதழ் சேர்த்து முத்துதிர்த்தால் என்ன...?
கபடமாய் நீ கருவிழி மூடினும்
காரிகை உன் பீடிகை அறிவேன்....
கிரி வலம் சுற்றும் எந்தன் ஆசைகள்
வரித்திடும் உந்தன் இதய ஓசைகள்....
பொழுதில் புலர்ந்த நிலவாய்
பொழிந்து வருவாய் அருகில்!
கவிதாயினி அமுதா பொற்கொடி