வாகை சூடி

கருப்பு வைரமாய் ஜொலிக்கும் நிலா
கார் மேக உலா
ஜோதி பிழம்பாய் தகிக்கும் கனல்
தேன் சிந்தும் பனி மழை
முட்கள் காம்பில் முளைக்கும் வெண்பனி
நாட்கள் நரம்பில் புடைக்கும்
முன்பனி
தொட்டு பேசும் ஊதக்காற்று
தொடாமல் பேசும் பூங்காற்று
அந்தியில் கமழும் அந்திமந்தாரை
குழலை இசைக்கும்
அந்த தாமரை
பச்சை பந்தல் புல்வெளி
நீலம் இரைத்த மணல்வெளி

தாவி தாவி ஓடும் மான்
தவிடு பொடியாக்கும் கண்

ஆகாய பூப்பந்தல்
அவன் மடி சாய்ந்தால்
சர்க்கரை தேன்கிண்ணம்
அது போதை தரும் மது கிண்ணம்
அவன் கன்னம்


குளிர் காற்று வீசுது
மழை வர போகுது
மயில் தோகை விரியுது
மனம் முழுக்க பாடுது


தென்றல் விரிக்கும் வயல்வெளி
வெள்ளி பந்தல் கொட்டும் வாய்க்கால்
காற்றை குடிக்கும்
மழை கானங்கள்
வாகை மலரை சூடும் மன்னவன்
தென்றலை வீசிடும் தென்னவன்
நாளை இந்த வேளை
என் கழுத்தில் மாலை சூடிடும் என்னவன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Jun-16, 6:49 pm)
Tanglish : vaagai soodi
பார்வை : 155

மேலே