நினைவுகளில் தாகமாய் நீ...
காற்றின் கவிதைக்குத்
தலை ஆட்டுகிற
தென்னை மரங்களோடு
பாட்டுக்குப் பல்லவி
தேடுகிறது
கருங்குயில் சுருதி சேர்த்து...
ஆலமரக் கிளை தனில்
சந்தம் சிந்துகிற
சங்கீதத் துளிகளாய்
பூக்களை உதிர்க்கிறது
பூவரச சிறு மரம்...
விண்வெளி தாண்டியும்
வார்த்தைகள் தேடி
அலகுகளில்
இறகாய்க் கொத்தி வருகிறது
ஆகாய வான் புறாக்கள்...
எத்தனை தான்
கொட்டித் தீர்த்த போதும்
நினைவுகளில் தாகமாய்
இன்னும் அதிகமாய்
நீ தான்
இருக்கிறாய்...!
மழைத் திவலைகளில்
மனசு குளிக்கும்
மண்வாசம்...