கண் காட்சி !

கண்ணை இமை காப்பது போலக்
காத்தாலும்
கண்ணால் இமைகளைக்
காண முடிவதில்லை !

உலகைப் பார்த்து
உண்மையை உணர்த்தும்
கண்களால்
தங்களைத் தாங்களே
பார்த்துக்கொள்ள முடிவதில்லை !

இரு கண்கள்
இரு காட்சி காணாதபோதும்
ஒரு கண்ணை மறு கண்ணால்
காணும் காட்சியும்
இயல்பில் இயல்வதில்லை !

ஒரு கண்ணில் நீர் வழிய
மறு கண்ணும் சேர்ந்தழுகும்
உயிர்நேயம் காட்டுவதும்
உறங்குதலும் விழித்தலும்
ஒத்தே இருப்பதும்
வியப்பிலும் வியப்பே !

தன்னைத்தான் காணாமல்
நன்மைகளைக் காட்டும்
கண்ணும்
தன்னைப் பார்க்காதபோதும்
கண்களைக் காத்துவரும்
இமையும்
எதையோ சொல்கின்றன !

எழுதியவர் : (22-Jun-11, 7:25 pm)
சேர்த்தது : ezhilamizhdhan
பார்வை : 267

மேலே