அறியாமை நீக்குகிறேன் வாடி........
பிறப்பிலிருந்து மரணம் வரை
அறியாமை உனது வாழ்வானதோ?
மழைக்குத் தோன்றி
மாண்டு போகும் மண்புழுவா நீ?
மலராகி வா!!!
உன்னை மணம் முடிக்கிறேன்.....
இடுப்பொடிந்து நீயும்
தலைவணங்கியது போதும்
கொஞ்சம் நிமிர்ந்து நீயும் -
வாழும் உலகைப் பார்
நீ என்னுடன் வாழ்ந்தால் போதும்!!!
எல்லாமே உனக்குள் அடங்குமடி.....