காத்திருப்பு
வறண்ட பூமி வானம் பார்த்து காத்திருக்கின்றன
மழை வருமென
குஞ்சுகள் அனைத்தும் கூட்டினுள்
காத்திருக்கின்றன
தாய்ப்பறவை வருமென
அலைகள் அடித்துக்கொண்டே இருக்கின்றன
அமைதி வருமென
மலர்கள் மலர்ந்துகொண்டே இருக்கின்றன
தேனீக்கள் வருமென
நானும் காத்துக்கொண்டே இருக்கின்றேன்
நீ விரும்பி வருவாயென