காதல் வெல்லும்
![](https://eluthu.com/images/loading.gif)
காலங்கள் மாறும் ; காணும்
காட்சிகள் மாறும் ; போடும்
கோலங்கள் மாறும் ; கொள்ளும்
கொள்கைகள் மாறும் ; இந்த
ஞாலம் மாறும் போது
நாம் மாறாதிருந்தால் போதும் .........
இதயத்தை எண்ணம் வெல்லும்
இளமையை முதுமை வெல்லும்
மதியை விதி வெல்லும்
வாழ்க்கையை கனவு வெல்லும் - இந்த
உலகத்தை நம் காதல் வெல்லும்................