எங்கோ தொலைந்து போனது

எங்கோ தொலைந்து போனது,
மீண்டும் புதிதாய் நெருங்கிட...
படபடப்பு ஏதும் இல்லாமல்,
தூரப்பார்வை காதல்...
எதிர்பாராத விழி மோதல்கள்,
எதையோ நினைவுபடுத்த...
என்ன இது? நான் தானா?

நீ அந்தரத்தில், என் மனமும் கூட...
புன்னகையில் புதைந்தே போகிறேன்...
என்னை ஏன் துரத்துகிறாய்?
என்னை மீட்டெடுக்கவா?

மீண்டும் முதலில் இருந்தோ?
நாசமாய் போன ஹார்மோனே,
எங்கே இருந்தாய் இத்தனை நாளாய்?

இப்படித்தான், என் கவிதை போலவே,
புரியாமல் ஒரு காதல்...
நீயாக தான் வருகிறாயா? நான் தொடர்கிறேனா?
முகநூல் முழுதும் தேடுகிறேன்,
காணவில்லையே காதலை...
நான் ஏன் தேட?
எனக்கு வேறு வேலை இருக்கிறது,
நினைவை விட்டு செல்...
அங்கே ஏற்கனவே இன்னொருத்தி தொல்லை தாங்கவில்லை...
நீ வேற... புதுசா....

என்னை ஏன் கை காட்டுகிறாய்?
பொறுக்கி என நினைத்திருப்பாயோ?
என்ன செய்ய... முகம் அப்படி...
நான் தான் பார்த்துவிட்டேன், இன்னமும் என்ன பார்வை?
போடி... எனக்கு உன்ன பிடிக்கல...

இது காதலும் இல்லை,
காதல் இல்லாமலும் இல்லை...
அமர்ந்து கொள் உன்னவன் அருகில்,
பாதி பயணத்தில் இறங்குகிறேன்...
நலம் உண்டாகட்டும்...

இதுவரை நினைவிலிருந்த புன்னகை மறக்க செய்தாய்...
அது போதும்...

இப்பொழுதும் போதையில்லை...
உனக்கும் தெரியுமோ அவளது வித்தை?
பேசாதே, அவள் குரல் கேட்கிறது...
போதும். நிறுத்திக்கொள்கிறேன்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (21-Jun-16, 10:21 pm)
பார்வை : 469

மேலே