உன்னாலே எல்லாம்

உன் பார்வையில்
ஜனித்தேன் !

உன் புன்னகையில்
பூத்தேன் !

உன் மௌனத்தில்
கவிதையானேன் !

உன் வார்த்தையில்
வாக்கியமானேன் !

உன் பிரிவில்
சருகானேன் !

உன் நினைவில்
ஞாபகமிழந்தேன் !

உன்னாலே எல்லாம் ஆனேன்

எழுதியவர் : புகழ்விழி (21-Jun-16, 9:36 pm)
Tanglish : unnale ellam
பார்வை : 670

மேலே