தடம் மாறிய கனவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே
பிரிவின் கணம்
கூடுகிறது உன்னால் ,,,,,,,,
எந்தன் நிழலுக்கு கூட
தனிமை
வலிக்கிறதாம்
உந்தன் நிழலின்
துணை இல்லாமல் ,,,,
இனிக்க இனிக்க பேசி
கொஞ்சி குலவிய
நாட்களைத்தான்
காணாமல் தேடுகிறேன்
இங்கு பலருக்கும்
வாய்த்ததடி
மணவாழ்க்கை
எனக்கும் தான்
வாய்த்ததடி
மனவாழ்க்கை
தனிமை
கூத்தாடுகிறது
நாம் பிரிந்து
இரு வருடங்கள் என ,,,,!
கண்ணீருக்கும் காதலுக்கும்
பூர்வ ஜென்ம பந்தமோ
தொடர்கதையாய் போனதடி
தாய் திரு நாட்டினிலே ,,,,,!