உன்னவள்
![](https://eluthu.com/images/loading.gif)
சூரியன் தெரியாது - தாமரை
தனக்காகதான் காத்திருக்கிறது என்று
சந்திரனுக்கு தெரியாது - அல்லி
தனக்காகத்தான் காத்திருக்கிறது என்று
மேகத்துக்கு தெரியாது - மயில்
தனக்காகத்தான் காத்திருக்கிறது என்று
மழைத்துளிகளுக்கு தெரியாது - பூமி
தனக்காகத்தான் காத்திருக்கிறது என்று
உனக்கு கூட தெரியாது - நான்
உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று
எப்பொழுது புரிந்து கொள்வாய்................
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.................
உன்னவள்