சொல் மனமே சொல்

கண்களே ஏன் அவளைப் பார்த்தாய் இப்படி நினைவுகளோடு கண்ணீர் சிந்தவா ?


மனமே ஏன் அவளிடம் பேசினாய் இப்படி அவள் பேசாமல் உன்னை நோகடிக்கவா ?


கனவுகளே ஏன் அவளுடன் கனவில் உலா வந்தாய் இப்படி நிஜத்தில் உன்னை விட்டு செல்லவா ?


பூக்களே ஏன் அவளுக்கு உன்னை பரிசளிக்கும் போது பேசாமல் இருந்து விட்டாய் இப்படி என் புன்னகைகளை பறிக்கவா ?


அன்பே ஏன் அவளை மட்டும் உயிருக்கு உயிராய் நேசித்தாய் இப்படி ஒரு கல்லறையை அவள் உனக்கு கட்டவா ?

சொல் மனமே சொல் ..............?

எழுதியவர் : ரவி.சு (22-Jun-16, 12:29 am)
Tanglish : soll maname soll
பார்வை : 540

மேலே