அஞ்சுகம்
கார்முகில் கூந்தல் கொண்டே -அதில்
மனம் கமிழும் மல்லிகை சூடி...
வட்டமுகமாம்..வாடாதது என்றும்
வண்டு சுற்றும் அல்லி போன்றவள். .
கயலின் உடலை இரு விழியாக்கி..
கொக்கி போன்ற புருவம் கொண்டு
கொக்கி போட்டு பிடித்தாலே என்னை...
தேன் தேடி செல்கையிலே...
தேடி வந்து கேட்டதே கானச்சத்தம்..
காட்டினூடே விரைந்தேன்...
கானத்தின் ஊற்றைத் தேடி. ..
குயிலா.? புல்லாங்குழலா..? என
அலைந்தது மனம். ..
கண்டதோ....
புல்வெளியில் விளையாடும். .
பனிதுளியோடு கதை பேசும். .
புள்ளி மானோடு பொழுதைகளிக்கும் ...
அஞ்சுகத்தோடு கொஞ்சிடும் அல்லியை...
பாண்டிய நாட்டு முத்துக்களை
அதுவரை நான் பார்த்ததில்லை. .
பார்த்துவிட்டேன் அவள் சிரிக்கும் போது. ..
கழுத்தில் சின்ன கருகு மணி ஆட
தோளில் அஞ்சுகம் அமர...
இடையில் நீர் குவளை ஏற...
அவள் ஓரப்பார்வையும் என் மீது பட...
அப்பப்பா...ஓரே சிலிர்ப்பு..
மருத மீனாட்சியை நான் கண்டதில்லை. ..
அஞ்சுகத்தோடு அவள் வரும் அழகு போதும் எனக்கு. ..
என் மீனாட்சி அவள் தான். ...

