இனியும் தாங்காது இந்த புஞ்சை மனம்
என் உதடுகள் காய்கிறது. ..
உள்ளமும் கூட. ..
நீர் இல்லாமலா...-இல்லை. .
நீ இல்லாததால். ..
ஆலம் இலை போல் காய்கிறதே..
ஆளில்லாமல் போனதேனோ..
புஞ்சை நிலத்து வறுமையானேனடி...
நஞ்சை நிலமாக மாற நிந்தன் வருகை வேண்டுமடி...
நஞ்சை மட்டும் விதைக்காதே-உந்தன்
நாவை கொண்டு. ..
இனியும் தாங்காது இந்த புஞ்சை மனம். .. !