புன்னகைக்காரி
படம் : செருந்திப்பூ
தென்றல் வருகையில் சிரிக்கின்றாய்...
புயல் வருகையில் சிரிக்கின்றாய்...
மரணம் வருகையிலும் சிரிக்கின்றாய்...
எப்படி?...
உன்னால் மட்டும் முடிகின்றது......
உன் மேல் விழும்
மண் துகளோ?...
உனக்கு வலிதான்......
முகில்கள் தூவும் மழையோ?...
உனக்கு வலிதான்......
இரவில் கொட்டும் பனியும்
உனக்கு வலிதான்......
வலிகளைத் தாங்கிக் கொண்டு
வதனத்தில் புன்னகை
எவ்வாறு உன்னால் முடிகின்றது......
புன்னகை...
உன்னில் ஒரு அங்கமோ?...
பூர்வ ஜென்மப் பந்தமோ?...
உன்னுயிருடன் உறவாடுதே......
தீண்டும் நேசத்தில் நீ
தேகம் நனைகின்றாய்......
வீசும் வாசத்தில் நீ
சுவாசம் நுழைகின்றாய்......
எந்த மனதிலும் நீ
மோகத்தை விதைக்கின்றாய்......
என் இதயமோ?...
உன் உயிரைக் கிள்ளிச் சென்றாலும்
மௌனப் புன்னகைச் செய்கின்றாய்...
எங்ஙனம்?...
உன்னால் அது இயல்கின்றது......
புன்னகைப் பூவே......