வா மழையே நீ வா

வானம் விட்டு வரும்
மழையேத் துளி மழையே...
மண்மீது நீ விழுந்து
தரளமாய்ச் சிதறுகின்றாயே...
நீரோடையில் நீ சேர்ந்து
உயிரும் மெய்யாய் கலக்கின்றாயே......


வண்ணம் வடிவம் உனக்கேது
வாய் மொழியின்றி
வாசல் வந்து சத்தமாய்ப் பேசுகின்றாயே...
பூக்களின் வதனத்தில் புன்னகை வீசுகின்றாயே......


வெண்முகில் இருளாய்க் கூட
கோலமயில்த் தோகை விரித்தாட
நீ பூமி வருகின்றாய்......


வாராதுப் பொய்த்து
தனியே வாடவும் செய்கின்றாய்...
அளவுக்கு அதிகமாய்ப் பொழிந்து
உன்னுடனே அழைத்தும் செல்கின்றாய்......


என் தாயின் சொந்தங்கள்
தன் சோகம் மறந்து
களிப்பதும் உன்னால் தானே......


உன் வரவினை எதிர்நோக்குதே
வறண்ட நிலங்களும்
வாடிய நெஞ்சங்களும் இங்கே......


வருணத் தேவனின் கண்ணீரில்
எழில் கொஞ்சனும் இயற்கை...
பொழில் பொங்கனும் நரன்களின்
நாளைய வாழ்க்கை......
வா மழையே நீ வா......

எழுதியவர் : இதயம் விஜய் (22-Jun-16, 8:54 am)
பார்வை : 1192

மேலே