உன் கண்ணில் என்னை காண்கிறேன்
வா போகலாம்
யாருடனும் பேச தோனல
எல்லாரும் என் உசுரு
உன்னால தான் போகும்னு சொல்றத
என்னால கேட்டுகிட்டு சும்மா இருக்க முடியல
இரத்த அழுத்தம் ஜாஸ்தியாகுது
வா போகலாம்
எனக்கு தெரியும்
என் புருஷன
நீங்க யாரும் சொல்ல தேவையில்ல
அப்படியே
என் புருஷன் கையால
என் உசுரு போனா
என்ன விட இந்த உலகத்ல பாக்கியம் பண்ணவ வேற யாருமேயில்ல.
அது எனக்கு கெடச்ச மிகப்பெரிய வரம்.
வாங்க போகலாம்
நான் செத்தா கூட
என்ன பாக்க வந்துடாதீங்க
எனக்கு எல்லாமா என் புருஷன் இருப்பாரு
கடைசி வரைக்கும்
என்னங்க
ஆ...
என்னடி
நெஞ்சு வலிக்குதுங்க
ஐயோ அம்மா
வலி தாங்க முடியலைங்க
மாமா....
எழுந்திருடா
உனக்கு ஒன்னுமில்லடா
மாமாவ பாருடா
அவ இல்லாத உலகத்ல
என்னால இருக்க முடியாது
நானும் அவ கூடவே போறன்
பிரபா.....
என்று கூறியபடியே
நெஞ்சை பிடித்துக்கொண்டு
பிரபாவின் நெஞ்சில் விழுந்தார்.
எல்லோரும்
பிரபா காதில்
கூறினர்
"அடிப்பாவி கணவனையும் கூடவே அழைச்சிட்டு போறீயேடி"
உடனே மயக்கத்தில் இருந்து மெதுவாய் கண் விழித்தாள்.
உடனே நெஞ்சின் மீது உள்ள கணவனை
கீழே போட்டு
அவர் மீது ஏறி படுத்துக்கொண்டாள்
எல்லோரும்
அடி பாதகத்தி
அவரை விடுடி விடுடி
என்று கத்தினார்கள்
ஆனால் அவளோ
மேலே படுத்து
நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அமுக்கி (தன் உடலை தூக்கி தூக்கி போட்டு) கொண்டிருந்தாள்
வாயோடு வாய் வைத்து
முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தாள்.
அடிக்கடி மேல் எழுந்து மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்
எல்லோரும்
கூறிக்கொண்டிருந்தார்கள்
"உயிர் போற நேரத்திலும்
இவள் இச்சைக்கு அளவில்லாமல் போய்விட்டது
மானங்கெட்டவள்"
அங்கே பார்
சேலையை அவிழ்க்கிறாள்
இத்தனை பேர் இருக்கிறோம் மானங்கெட்டவள்
புடவையை அவிழ்த்துவிட்டு
பாவாடையும் ஜாக்கெட்டுமாய்
கிடக்கிறாளே
சேலையை அவிழ்த்து
கணவனுக்கு போர்த்திவிட்டாள்
சாவதற்கு முன்னாலே
போர்த்துகிறாள்
பார்த்தீர்களா?
நெஞ்சில் கைவைத்து நசுக்குகிறாள்
அவரின் கைகளை
இவள் கழுத்தில் மாட்டி உடைக்கிறாள்
கட்டியணைக்கும் பேரில்
அவரை நசுக்கி எடுக்கிறாள்
மீண்டும் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்
அசிங்கம்பிடித்தவள்
காலை உருவி விடவில்லை
எலும்பை முறிக்கிறாள்.
மீண்டும் பாரேன்
மயங்குவது போல் நடித்து
அவரை தள்ளிவிட்டு அவர்மீது விழுகிறாள்
நீங்களே பாருங்களேன்
அவள் மீண்டும் அவரை கட்டிபிடிப்பாள்
ஆமாம்
கட்டிபிடிக்கிறாள்
இன்னும் பாருங்கள்
என்னன்ன செய்வாள் என்று
நெஞ்சோடு நெஞ்சம்
வைத்து உடலை தூக்கி தூக்கி வாரி போட்டு
உராய்ந்து நசுக்குகிறாள்
அதுமட்டுமா
பாருங்கள்
வாயோடு வாய் வைத்து முத்தங்கள் கொடுத்துக் கொண்டே கழுத்தை தடவி விடுவது போல் நெறிக்கிறாள்.
கட்டின கணவனை கொல்லத்துடிக்கும் இவள் எல்லாம்
என்ன பெண்ணோ?
நாம் இன்னும்
பார்த்துக்கொண்டே இருக்காமல்
அவளிடமிருந்து அவரை காப்பாற்றுவோம்.
பிரபா...
எழுந்திட்டீங்களா?
உம்மா (நெற்றியில் முத்தமிட்டாள்)
என்னடி செய்கிறாய்
ஏன்
கீழே வழுக்கி செல்கிறாய்
ஒருநிமிடம் மாமா
கால்களை கட்டிக்கொண்டு
பாதத்தில் படுத்திட்டாள்
எழுந்திருடி
ம்ம்ம்
ம்ம்ம்
ஆ ...ஆ.. ஆ......ஆ...ஆ...
என்னடி இப்படி மூச்சு வாங்குது
மேலே மாமன் அருகில் சென்றாள்.
மாமன் சேலையை எனக்கு ஏனடி போர்த்தியிருக்கிறாய்
என்று கேட்டு முடிக்கும் முன்பே
மாமனை தூக்கி வாரி
தன் மீது போட்டு
உடலை முழுவதுமாய் மறைத்திட்டாள்
மாமனை இவள் பார்க்க
இவளை மாமன் பார்க்க
உயிரை விட்டாள்
~ பிரபாவதி வீரமுத்து