என் உலகம் அஸ்தமிக்காது அது உன்னில் இருக்கிறது

உனக்காக என் உயிரை கொடுப்பேன்
உன் ஒருத்தனுக்கே
என் மானத்தை விற்பேன்
எத்தனை பிறவி எடுத்தாலும்
உன்னை வந்து சேர்வேன்
(உயிரை ஊரறிய கொடுப்பேன்
உடலை உன்னுள்ளே கொடுப்பேன்
தனிமையில் உனை சுவாசிப்பேன்
உன்னில் சுவாசமாகிடுவேன்.
உடல் பொருள் ஆவி அனைத்தும் நீயே
என் உலகமும் நீயே
அதன் இயக்கமும் நீயே
உன்னால் தானே வாழ்கிறேன்.
உனக்காக தானே பிறக்கிறேன்
இந்தபிறவியும்
எந்தபிறவியும் உனக்கானதே
இந்த உயிர் போக போவதும் உன்னிலே)
இந்த உடம்பு உனக்கானது
நீ வெட்டி போட்டாலும்
என் நெஞ்ச காட்டுவன்
குத்திக்கோனு
ஆனா நீ வார்த்தையால
என்ன கொன்னன்னா
நாண்டுகிட்டு செத்து போயிடுவன்
உடம்புல ஓட்ற ஒவ்வொரு செல்லும்
உன் பேர தான் சொல்லும்
என் உசுருல கலந்தது
நீ ஒருத்தனே.
உன்ன தவிர
இந்த உலகத்ல எனக்கு வேற
யாரையும் தெரியாது
தெரியவும் வேண்டாம்
நீ தான் என் உலகம்
உன்னால தான் என் நாட்கள் நகருது
இந்த உலகமே எதிர்த்தாலும்
நீ என் பக்கத்ல இருந்தா போதும்
நான் எல்லாத்தையும் அடஞ்சிடுவன்
எனக்காக யாரு இருக்கானு கேட்டா
தைரியமா
நீ இருக்கனு சொல்லுவன்
நீ என்ன
பொய்யா கூட
வேணாம்னு சொல்லிட்டா
நான் அந்த நொடியே
உயிர விட்ருவன்
உன் பசிய போக்கறதுக்காக
நான் ஈரதுணிய கட்டிப்பன்
உன்னோட வயித்து பசிய என்னால போக்க முடியலன்னா
நான் என்னையே உனக்கு கொடுத்து உன் உடம்ப தேத்திடுவன்.
உடம்பு சுகத்துக்கு ஆசபட்டு இல்ல.
என் மாமாவ என்னால பட்டினியில
துடிக்கிறத பாக்க முடியல
அதான் நான் செத்தாலும் பரவாயில்லனு
என்னையே அவருக்கு தர்றன்.
அவரோட உடம்ப அவருக்கு தர்ற நான் எதுக்கு யோசிக்கணும்.
என்னால உன் தாகத்த போக்க முடியலன்னா
என் உடம்ப அறுத்து இரத்தத்த
உனக்கு தருவன்.
என் மேனி மெலிந்து
பால் வற்றிவிட்டது
குழந்தைக்கு பால் வேண்டும்.
நாங்கள் வறுமையில் சிக்கியவர்கள்
என்ன செய்வதென்று யோசித்து
என் மார்பகங்களை வெட்டி
நெஞ்சில் ஊறும் இரத்தத்தை என் சேய்க்கு வார்த்தேன்.
என் உடையால் குழந்தைக்கு ஓர் உடை கிடைக்குமென்றால்
நான் எனை கொன்றிடுவேன்
இருவருக்கு மட்டுமே
உணவு சரியாக இருக்குமென்றால்
சரியான நேரத்தில் செத்திடுவேன்
என் உடலை புதைக்கவேண்டாம் மாமா
உடலை துண்டு துண்டாக
வெட்டி சமைத்து சாப்பிடுங்கள்.
நீங்கள் வயிறாற உண்டாலே அதுவே
எனக்கு போதும்
இதயத்தை வெட்டும் பொழுது
பார்த்து வெட்டுங்கள்
உங்களுக்கு வலித்திட போகிறது
என் உலகம் அஸ்தமிக்காது
~ பிரபாவதி வீரமுத்து