இது தான் காதலடி


என்னவளே

உன்னிடம் காதலை சொல்ல ரோஜாவை நீட்ட வில்லை

கடிதம் மூலம் காதலை சொன்னதில்லை

உன்னுடன் சேர்ந்து நம் காதலை பாட வில்லை

உன்னுடன் இருப்பது போல் கனவு காணவில்லை

உன்னோடு ஊர் சுற்றவும் இல்லை

நம் காதலை கவிதையாய் கொட்டவில்லை

உன் பின்னாடி சுற்றவில்லை

நீதான் அழகி என்று பொய் சொன்னதில்லை

உன்னை நான் காதலிக்கிறேன் என்று வாய்

விட்டு கத்தவில்லை

எதனையும் செய்தால்தான் காதல

என்னவளே உன்னிடம் என் காதலை சொல்ல

உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல

என் கண்ணசைவு போதுமடி

உன் உயிர் என் கண்ணில் வாழுமடி

இதுதான் காதலடி

எழுதியவர் : rudhran (14-Jul-10, 10:21 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 598

மேலே