பெற்றோரே…

வெயிலும் மழையும் இலையெனிலும்
வேடிக்கைக் காகக் குடைபிடிப்பான்,
பயிலும் பள்ளி விடுமுறையில்
பறக்கச் சிறகுகள் வந்துவிடும்,
துயிலும் பொழுதைத் தவிரதினம்
துடிப்பா யிருக்கும் பருவமிது,
இயல்பிதை வளர்த்தே நல்வழியில்
இவனைச் செதுக்குவீர் பெற்றோரே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jun-16, 6:06 pm)
பார்வை : 78

மேலே