பனி மழையும் புறாவும்

மரத்தின் அன்பாக
இலைகளினுடே ஒரு
காதல் பயணம்
உனது மரத்தின்
இலைகளாகி
உதிர்கிறேன்
நமது காதலின்
தடமாக

விடியாத இரவில்
முடியாத அழுகையாக
மனதின்
ஒரு ஏக்கம்

மாலையின் மங்காத
புறாக்களின்
மெல்லிய சிறகடிப்புகளில்
உதிர்ந்த சிறகு
எனது கவிதை
சுகமாக உனை வருடட்டும்

ஈரமான இலைகளின்
நினைவுகளாக
காலையில்
அதன் பனித்துளி
உனது மரத்தினுடே

தினமும் குளிர்கிறேன்
இது ஜலதோஷமற்ற
நமது காதல்
பனிமழை .

எழுதியவர் : கோபிரியன் (22-Jun-16, 6:26 pm)
பார்வை : 90

மேலே