தோழியும் என் நட்பும்

மழை துளி மண்ணை நனைத்த போது என் கண்ணீர் துளிகள் என் கன்னங்களை நனைத்து கொண்டு இருந்தன
காரணம் தெரியாமலே வந்த புயலை போல
காரணம் கருதாமல் வந்த துன்பம்,என் இதயத்தை காயபடுத்தி கொண்டு இருந்தது.
புயல் ஒய்ந்த பின் அமைதி நிலவும் என்பது ஊர் அறிந்த உண்மை
ஆனால்!
என் உள்ளதில் குமறிக்கொண்டு இருத்த வேதனைகளோ என் மனதிற்கு அமைதியை தரவில்லை ஏன்?
எதிர் பாராமல் வந்த பரிசை போல வந்தால் என் தோழி !
தாயை போல வாரி அனைத்து கொண்டால் தன மார்போடு என்னை,
எபோதும் கிடைக்காத அமைதி இப்பொது கிடைத்தது இதமாக,
எனக்கோ 17 வயது ,அவளுக்கோ 20 வயது!
"நட்புக்குள் வயது தடை இல்லை" என்று கூறிய அவளின் குரல் உள்ளே ஒலித்து கொண்டிருந்தது !
மனம் ஒன்று நினைத்தாள் போதும் மரணத்தையும் தாண்டி வரும் "நட்பு " என்பதில் உணர்ந்தேன்,
தெளிந்தேன் அவளால்!!
கட்டி அணைத்து கொண்டால் என்னை
என்னை அவள் மடியில் சாய்த்து கொண்டால், சிறு குழந்தையை தட்டி குடுப்பதை போல தட்டி கொடுத்தாள்
உன்னர்ந்தேன் உண்மையை அந்த நொடி
உறவுகள் அனைத்தும் பொய் ,உயிர் அற்ற உடல்கள் தான் உறவுகள் என்று
உணர்வற்ற நிலையுலும், உள்ளங்களாக தோன்றும் உன்னதமான உணர்வு தான் "நட்பு" என்று.
தோழியே!
ஈரேழு பிறவி எடுத்தாலும் சரி
இதுவே கடைசி பிறவியாக இருந்தாலும் சரி
உறவுகளாக தோன்றி உணர்வுகள் அற்று நான் வாழ விரும்ப வில்லை!
என்றும், எபோதும் என் மூச்சு காற்று நிற்கும் வரையிலும்
உன் தோழியாக மட்டுமே வாழ அசை!!!!

எழுதியவர் : ஜனனி (23-Jun-11, 6:06 am)
சேர்த்தது : Roshini
பார்வை : 732

மேலே