காதல்
பெண்ணே!
உன்னைக் கண்டதென்னவோ ஒரே ஒரு முறைதான்
எனினும் தினமும் என்னில் காண்கிறேன் உன்னை
நான் இப்பொழுதெல்லாம்
தனியாகவே பேசுகிறேன்
என் காதல் கதையை
எப்படி தொடங்கி எப்படி வளர்ப்பதென்று
தெரியாமல் முழிக்கிறேன்
உன் நினைவால் எப்பொழுதும் இருப்பதால்
தூக்கம் கூட என்னை வெறுக்கிறது
ஆம் ஆதலால்தான்
இன்று ஓர் முடிவுக்கு வந்து விட்டேன்
இனியும் நான் உன்னைப் போல்
மெளனமாய் இருக்கக் கூடாதென்று!
காதலுக்கு அறிகுறியே
மெளனம்தான் என்றாலும்
ஆபத்து மிக்கதும் அதுதான்
ஒரு நாள் இரு நாள் அல்ல
பல நாட்களாய் நாங்கள் இருவரும்
மெளனமாகத்தான் இருந்தோம்
கண்களால் பேசி பழகினோம்
இதழ்களில் புன்னகை பூத்தோம்
ஆனாலும் உள்ளக் காதலை
இன்னும் வெளிப்படுத்தவில்லை
நட்பாகவே தொடர்கிறது
எங்களது உறவு!
அவை காதலாய் மலர்வதற்குள்
எங்களை நாங்கள் புரிந்துக் கொள்ளாதுப் போனால்
காதலை பிரிக்கவும் முடியாது
நினைவுகளை தடுக்கவும் முடியாது
ஆம் காதல் மலர்
என் நெஞ்சில் பூத்து பல நாளாச்சு!