முகவரி தேடி
என் கனவுகளில் நிறைந்த கன்னியே
எனக்காக மலந்த மங்கையே
என் நினைவில் ஓடும் கங்கையே
எனக்காக உருவான முல்லையே
உனை நேரில் காணத்தான் துடிக்கிறேன்
தினம் தூங்காமல் உடல் இளைக்கிறேன்
எழில் பூமுகத்தை மட்டும் காட்டிவிட்டு
எங்கே நீ சென்றுவிட்டாய் வெண்நிலவே!
அன்று முதல் இன்றுவரை
விழித்த விழி விழித்த படி
வலை வீசி தேடுகிறேன்
என்னுயிர் கயல்விழியை
நீ இருக்குமிடம் இன்றுதான்
நான் அறிந்து கொண்டேன்
என்னுள் நீ இருந்தாலும்
நீதான் என்னுயிரென்று
எப்படி எடுத்துரைப்பது இவ்வுலகிற்கு?
உன் ஆசை தெரியாமல்...
ஆதலால்தான் உன் முகவரியை தேடுகிறேன்
முறைப்படி வந்து உன் வீட்டில் கலந்து பேசி
தாம்பூலத்தட்டு மாற்றியப் பின்
நம் காதல் காவியத்தை
மணமேடையில் அரங்கேற்ற
ஊர் கூடி வாழ்த்த
நீயும் நானும் மணமாலை மாற்றி
கணவன் மனைவியாய்
பதவிப்பிரமாணம் செய்யலாம்
அதுவரை இரகசியமாய்
நாம் காதல் செய்யலாம்!