தங்கமான பாலைவன நிலங்கள்
தகதகக்கும் தங்கமான பாலைவன
நிலங்களில் வானம்பாடிகள் பறந்து
பறந்து ஆடித் திரிகின்றன!
வானமண்டலத்திலிருந்து கதிரவன்
வனத்தினிடையே ஒளி பாய்ச்சி
ஊடுருவிக் கொண்டிருக்கிறான்!
அண்டங் காக்கைகள்
வானில் வட்டமிட்டபடி
பூமியை நோட்டமிடுகின்றன!
வானம்பாடிகள் தங்கள் ஆட்டத்தை
நிறுத்திக் கொள்ளாமல் விளையாடிக்
கொண்டே இருக்கின்றன!
காட்டு அணில்களும்
ஆட்டத்தில் சேர்ந்து
கொள்கின்றன!
தொலைவிலிருந்த
இரு நாட்டு அணில்களுக்கும்
ஆட்டத்தில் சேர விருப்பம்!
அவைகளும் அங்கு வந்து
ஒன்றையொன்று வேடிக்கையாகத்
துரத்தி விளையாட ஆரம்பித்தன!
பழுப்பு நிற முயல்கள் நான்கு
நடப்பது என்னவென உன்னிப்பாய்
கவனமுடன் ஆராய்கின்றன!
பாடும் பறவைகளின் தேர்ந்தெடுத்துப்
பாடும் பாடலை மெல்லென வீசும்
தென்றல் காற்று!
வெட்ட வெளிதனில்
பண் இசைத்து தேனாகக் காதுகளில்
பாய்ந்து இன்புறுத்துகிறது!
அங்கமர்ந்து பிரமிப்பும்
ஆச்சர்யமுமாய் வியந்து
நான் கவனிக்கிறேன்!
எனக்குள் நினைக்கிறேன் - நான்
என்ன இறந்து விட்டேனா அல்லது
சொர்க்கத்திற்குச் சென்று விட்டேனா!
Ref: In A Golden Desert Field - Poem by Angela Yarbrough